விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் நாளை பிப்.26ஆம் தேதி உதய்பூரில் நடக்கிறது. இதில் குடும்ப உறவினர்கள் மற்றும் மணமக்களின் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். திருமண வரவேற்பு மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் இந்த தம்பதிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “பிப்ரவரி 26, 2026 அன்று நடைபெறும் விஜய் மற்றும் ராஷ்மிகாவின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டதில் மகிழ்ச்சிய்டைகிறேன். இந்த மகிழ்ச்சியான மற்றும் புனிதமான தருணத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குடும்பங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Advertisment

விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய, அழகான அத்தியாயத்தை தொடங்குகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையில்  ஒரு தெய்வீக ஸ்கிரிப்டின் அத்தியாயம். மேலும் வெள்ளித்திரையில் அவர்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை மிஞ்சும் என நம்புகிறேன். சிந்தனையுடனும் அன்புடனும், இருவரும் அவர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளட்டும். இந்த முக்கியமான தருணத்தில் தம்பதியினருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும்” என்றுள்ளார்.