பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தர்மேந்திரா(89). 1960 ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை நாயகனாக பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்தியைத் தாண்டி பஞ்சாபி மொழி உட்பட கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பத்மபூஷன் விருதும் இந்திய அரசு வழங்கி கௌரவித்தது. சினிமாவை தாண்டி அரசியலிலும் இருந்துள்ளார். பிஜேபி சார்பில் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 

Advertisment

இவர் சமீபகாலமாக உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அண்மையில் மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே, இவர் மறைந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை அவரது மனைவியான நடிகை ஹேமா மாலினி தெரிவித்தார். மேலும் செய்தி வெளியிட்ட ஊடகங்களை கடுமையாக சாடினார். பின்பு தர்மேந்தியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

17 (18)

இந்த நிலையில் தர்மேந்திரா இன்று காலமாகியுள்ளார். இவரது மறைவு திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் ஒரு அடையாளமான திரைப்பட ஆளுமை, அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வசீகரத்தையும் ஆழத்தையும் கொண்டு வந்த ஒரு அற்புதமான நடிகர். அவர் மாறுபட்ட வேடங்களில் நடித்த விதம் எண்ணற்ற மக்களை கவர்ந்தது. அதே அளவு அவரது எளிமையும் பணிவும் அரவணைப்பும் போற்றப்பட்டது. இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்கள் மீதும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.