தேனியில் ஒரு கடை திறப்பு விழாவில் நமிதா கலந்து கொண்டார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் முன்பு நிறைய தவறுகள் செய்துவிட்டேன். அதை மீண்டும் செய்யக்கூடாது என நினைக்கிறேன். அதனாலேயே நிறைய கதைகளை நிராகரித்து விட்டேன். அதனால் கவர்ச்சியான கதாபாத்திரம் எனக்கு வேண்டாம். பவர்ஃபுல்லான கதாபாத்திரம் வேண்டும். 

Advertisment

படையப்பா படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் இப்போது ரீ ரிலீஸில் அக்கதாபாத்திரத்தை பற்றி பேசுகிறீர்கள். அந்த மாதிரி அழுத்தமான கதாபாத்திரம் வேண்டும். பாலிவுட்டில் வித்யா பாலன், ராதிகா ஆப்தே போன்ற நடிகைகளை பின்பற்றுகிறேன். அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அது போல் எதிர்பார்க்கிறேன். 

Advertisment

இப்போது செல்வராகவனுடன் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறேன். அவருடைய மற்ற பட ஒப்பந்தத்தால் இந்த படம் தள்ளிப் போகிறது. விஜய் மாதிரியான சிறந்த டான்சர்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. பிரபு தேவா, என்.டி.ஆர் போல தமிழ் சினிமாவில் விஜய். ஒரு சிறந்த நடிகராகவும், டான்சராகவும் திரைத் துறையில் விஜயை மிஸ் செய்கிறேன்” என்றார்.