Advertisment

மேடையில் கீழே விழுந்த நாக சைதன்யா!

388

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கடைசியாக ‘தண்டேல்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ‘வ்ருஷகர்மா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் தண்டு இயக்கி வரும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வரும் இப்படத்திற்கு அஜனீஷ் பி லோகனாத் இசையமைக்கிறார். 

Advertisment

இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் நாக சைதன்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் நாற்காலியில் அமரும் போது நாக சைதன்யா சம நிலை தவறி கிழே விழுந்தார். உடனே அருகில் இருந்த உதவியாளர்கள் அவரை தூக்க சென்றனர். ஆனால் அதற்குள் அவரே சிரித்து கொண்டே எந்த காயமுமின்றி எழுந்தார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisment

Naga Chaitanya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe