சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் ரியல் ராஜ். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர், பின்பு ஜோ, ஸ்வீட் ஹார்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் புதிதாக நடித்துள்ள திரைப்படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’. 

Advertisment

இப்படத்தில் ரியோ ராஜுடன் ஜோ படத்தில் ஜோடியாக நடித்த மாளவிகா மனோஜ் மீண்டும் ஜோடியாக நடித்துள்ளார். இவரை தவிர்த்து ஆர் ஜே விக்னேஷ் காந்த் ஷீலா ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தை கலையரசன் தங்கவேல் எழுதி இயக்கியுள்ளார் ஜோ படத்திற்கு இசையமைத்த சித்து குமாரே இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குநர் மற்றும் நடிகர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசுகையில், “ரியோ ராஜ் என்பதை ரியோ என மாற்றிக் கொள்ளலாம். ரியோ என்ற பெயர் கேட்சியாக இருக்கிறது. ராஜ் என்ற பெயர் வேண்டாம், அது டைல்யூட் செய்கிறது. ஆனால் ரியோ என்றால், அந்த ‘யோ’ மேலே செல்கிறது. அதனால் படத்தில் பெயரை எடிட் செய்து விடலாம். லியோ என்பது போல ரியோ இருந்து கொள்ளட்டும்” என்றார்.