Advertisment

மீண்டும் எழுந்த சர்ச்சை; தமன்னாவிற்கு எதிராக பிஜேபி!

14 (59)

மைசூர் சாண்டல் சோப்பை தயாரிக்கும் கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட்(KSDL) நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இரண்டு வருடத்துக்கு ரூ.6.20 கோடி சம்பளம் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவு கன்னட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாக்கியது. கன்னட திரையுலகில் திறமையான நடிகைகள் இருக்கும் போது ஏன் பாலிவுட் நடிகையான தமன்னாவை நியமிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. இதை தொடர்ந்து கன்னட அமைப்புகளும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக தொழில் துறை அமைச்சர் பாட்டீல், கர்நாடகாவைத் தாண்டி மற்ற சந்தையிலும் மைசூர் சாண்டல் வலுப்பெற வேண்டும் என்பதால் இந்த முடிவு என விளக்கமளித்திருந்தார். இருப்பினும் தமன்னா நியமனத்திற்கு எதிர்ப்பு தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது. இதில் கன்னட நடிகை ரம்யா எனும் திவ்யா ஸ்பந்தனாவும் அடங்குவார். அவர், இந்த அரசு தன் சொந்த மக்களை, குறிப்பாக சோப்பின் விசுவாசமான வாடிக்கையாளர்களை அந்நியப்படுத்தியுள்ளதாக விமர்சித்திருந்தார். இவை அனைத்தும் கடந்த வருடம் முதல் பாதியில் நடந்தது. அதையடுத்து சற்று அமைதியானது. 

Advertisment

இந்த நிலையில் மைசூர் சாண்டல் சோப்பின் புதுப்பொலிவு அறிமுக விழா பெங்களூரு​வில் நேற்று நடை​பெற்றது. இதில் அமைச்​சர் பாட்​டீல், தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தற்போது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக மீண்டும் கன்னட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். பாஜக எம்பி கே. சுதாகர், இந்த நடவடிக்கை காங்கிரஸின் கன்னட எதிர்ப்பு மனநிலையைக் காட்டுவதாக குற்றம்சாட்டினார். மேலும் உள்ளூர் திறமையாளர்களை பிராந்திய பெருமைக்கு அவமானப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

Tamanna
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe