மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முஸ்தபா முஸ்தபா’. இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் பகிர்ந்து கொண்டதாவது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முஸ்தபா முஸ்தபா’. ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய போராடும்போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும்.
எங்கள் படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குநர்கள் வெங்கட் பிரபு சார், ராஜு முருகன் சார் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.
Follow Us