தியாகராஜன் நடிப்பில் 1988ஆம் ஆண்டு வெளியான ‘பூவுக்குள் பூகம்பம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சங்கீத ராஜன். இவருக்கு எஸ் பி வெங்கடேஷ் என்று இன்னொரு பெயரும் உண்டு. திரைத்துறையில் சேலம் விஷ்ணு, காவல் பூனைகள், வடக்கு வாசல், என் கணவர், பாட்டாளி மகன் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளியான ‘ஒற்று’ எனும் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒரியா, போஜ்புரி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடல்களைத் தாண்டி பின்னணி இசைக்கு இவர் பிரபலமாக இருந்தார். இந்த சூழலில் கடந்த ஒரு வருடமாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் நேற்று காலை சென்னையில் அவரது வீட்டில் காலமானார். இவருக்கு கோபால் சுகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மதியம் 1 மணியளவில் போரூர் மயானத்தில் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/04/18-55-2026-02-04-11-34-40.jpg)