சமுத்திரம், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சபேஷ். இவர் தனது சகோதரரான முரளியுடன் இணைந்து இசையமைத்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் இசையமைப்பாளர் தேவாவின் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இதில் சபேஷ் பாடகராகவும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தேவா இசையில் ஹிட் பாடல்களான ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘கந்தன் இருக்கும் இடம் கந்தகோட்டம்’, ‘கொத்தால் சவடி லேடி...’ உள்ளிட்ட பல பாடல்கள் பாடியுள்ளார். சமீப காலமாக குறைவான படங்களிலே பணியாற்றி வந்தார். இதனிடையில் இசையமைப்பாளர்களின் சங்கத்தின் தலைவராகாவும் பொறுப்பு வகித்து வந்தார். 

Advertisment

இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 66. இவரது உடல் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.