Advertisment

“15 நாள் கோமாவில் இருந்தேன்...” - பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்

19 (65)

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி பிரபலமானவர் முமைத் கான். தமிழில் இவர் நடனமாடிய, ‘நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே’(வேட்டையாடு விளையாடு), ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’(போக்கிரி), ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’(வில்லு), ‘மீனா குமாரி’(கந்தசாமி), ‘மலையூரு நாட்டாம’(மம்மட்டியான்) உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டடித்தது.

Advertisment

இவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். இந்த நிலையில் அதற்கான காரணத்தை அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “நான் சினிமாவை விட்டு விலகவில்லை. எனக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் மூளையில் உள்ள ஐந்து நரம்புகள் பாதிக்கப்பட்டன. இதனால் குறைந்தது ஏழு வருடம் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என மருத்துவர் என்னிடம் கூறினார். அந்த விபத்து காரணமாக நான் 15 நாட்கள் கோமாவில் இருந்தேன். 

Advertisment

கடவுள் தான் என்னை முமைத் கானாக உருவாக்கினார். அவரே அதற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த ஏழு ஆண்டுகள் என்னை நானே புரிந்து கொள்ள பயன்படுத்திக் கொண்டேன்.” என்றார். இவரது இந்த பேட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

cinema Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe