வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு கைவசம் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என வைத்துள்ளார். இதில் தேசிங் பெரியசாமி படம் சிம்புவின் 50ஆவது படமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த அப்டேட்டும் தற்போது இல்லாமல் இருக்கிறது. ஆனால் அவரது 51வது படமாக அறிவிக்கப்பட்ட அஸ்வத் மாரிமுத்து படம் தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. அதாவது பட நாயகியை படக் குழு தீவிரமாக தேடி வருவதாகவும் இதில் மிருணாள் தாகூர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Advertisment

இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் நேரடி தமிழ் சினிமாவில் மிருணாள் தாகூர் அறிமுகமாவார். முன்னதாக சீதா ராமம் படம் மூலம் பிரபலமாகியிருந்தார். நாயகியைத் தாண்டி படத்தின் இசையமைப்பாளரையும் படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளது. அதாவது அனிருத்தை கமிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் சிம்புவுடன் அரசன் படத்திற்கு பிறகு மீண்டும் அனிருத் இணைவார்.

Advertisment

முன்னதாக சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு போஸ்டரில் ‘காட் ஆப் லவ்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் காதல் ஃபேண்டஸி ஜானரில் படம் உருவாகிறது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப் போஸ்டரே எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது வந்திருக்கும் நாயகி மற்றும் இசையமைப்பாளரின் தகவல் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.