‘சீதா ராமம்’ படம் மூலம் பிரபலமான மிருணாள் தாகூர் தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு மொழிகளிலுமே தலா இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். 

Advertisment

இந்த சூழலில் இவர் சமீப காலமாக அடிக்கடி காதல் வதந்திகளில் சிக்கி வருகிறார். முதலில் நடிகர் தனுஷை இவர் காதலிப்பதாக செய்திகள் உலா வந்தது. ஆனால் அதை மிருணாள் தாகூர் மறுத்திருந்தார். இதையடுத்து இரண்டாவதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயரை காதலித்து வருவதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் உலா வந்தது. இதனையும் தற்போது மிருணாள் தாகூர் மறுக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 

Advertisment

அந்த வீடியோவில் தனது அம்மாவுடன் இருக்கும் அவர், “அவர்கள் பேசுகிறார்கள் நாங்கள் சிரிக்கிறோம். வததிகள் இலவச விளம்பரங்கள். எனக்கு இலவச விஷயங்கள் பிடிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.