சமீப காலங்களில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அப்படி வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில், விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா மற்றும் சமீபத்தில் வெளியான அஜித்தின் மங்காத்தா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் வர இருக்கின்ற காதலர் தினத்தை முன்னிட்டு மின்னலே படம் ரீ ரிலிஸாவதாக கூறப்படுகிறது. இதைப்போல் பல திரைப்படங்கள் தொடர்ந்து ரீ ரிலிஸாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2002 ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அமீர் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். மேலும் த்ரிஷாவும் நாயகியாக அறிமுகானார்.
மேலும், லைலா நந்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல பெற்றிருந்தன. இப்படம் வெளியான அந்த காலகட்டத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாகப் படத்தின் போஸ்டர்களும் வெளியாகியுள்ளன. சிறந்த கதைக்களம் மற்றும் பாடல்களைக் கொண்ட காதல் படமான இந்த மௌனம் பேசியதே மீண்டும் திரையிட இருக்கும் நிலையில், மறுபடியும் ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.
Follow Us