Advertisment

அஜித்துடன் இணையும் மோகன்லால்!

16 (62)

குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு கார் ரேஸில் பிசியாக இருந்து வருகிறார் அஜித். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனால், இன்னும் வெளிநாடுகளில் கார் ரேஸில் பரபரப்பாக இருந்து வரும் அஜித் எப்போது வருவார்? படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விட்டதாகவும்,  சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Advertisment

அதே நேரத்தில், இந்த படத்தில் ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அதோடு, தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களான மிஷ்கின், ஜி.வி.பிரகாஷ்குமார் போன்றோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளதால், ரசிகர்களுக்கு  இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.  

Advertisment

முதற்கட்டமாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் விரைவில் அஜித் படக்குழுவினருடன் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த படம் அஜித்தின் 64 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR mohanlal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe