மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், சமீபத்தில் இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். திரைப்படம் பொறுத்தவரை ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 3, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ‘பேட்ரியாட்’ மற்றும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்
இந்த நிலையில் மோகன்லால் வீட்டில் ஒரு சோக நிகழ்வு நடந்துள்ளது. அவரின் தாயாரான சாந்தகுமாரி இன்று உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவரது மறைவு மோகன்லால் நெருங்கிய வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாந்தகுமாரியின் இறுதி சடங்கு நாளை திருவனந்தபுரத்தில் இருக்கும் அவரது வீட்டில் நடைபெறும் என கூறப்படுகிறது. சாந்தகுமாரி, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் விஸ்வநாதன் கேரள அரசின் சட்டச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்த வேலை காரணமாக தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார். இவர் 2007ஆம் ஆண்டு மறைந்தார். இவருக்கு பியாரேலால் என்ற மகன் இருந்தார். ஆனால் அவர் கடந்த 2000ஆம் ஆண்டு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அவர் இறந்தார்.
சாந்தகுமாரியின் மறைவுக்கு தற்போது பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மோகன்லாலின் நண்பரும் நடிகருமான கமல்ஹாசன், “பிரதர் மோகன்லால் உங்களை நீங்கள் மட்டும் தான் தேற்றிக் கொள்ள முடியும் நண்பர்கள் எப்போதும் போல உங்களுக்கு துணையாக இருப்பார்கள் முடியாது பாதுகாப்பாக இருங்கள் நாங்கள் அனைவரும் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/30/01-2025-12-30-19-06-04.jpg)