த்ரிஷ்யம் படங்களின் வெற்றியை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது! இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்கவைத்துள்ளது.
இது தொடர்பாக மோகன்லால் பேசுகையில், “என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், வரிகளுக்கு இடையிலான அமைதியிலும் ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது புதிய ரகசியங்களுடன் என் பழைய நண்பரை சந்திப்பது போல உணர்கிறேன். இந்தமுறை அவரது பயணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நான் ஆவலாக உள்ளேன்” என்றார்.
Follow Us