அத்வைத் நாயர் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சத்தா பச்சா’. ரமேஷ் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் ஷௌகத்தின் ரீல் வேர்ல்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு சங்கர்-எஹ்சான்-லாய் பாடல்களுக்கும், முஜீப் மஜீத் பின்னணி இசைக்கும் இசையமைத்துள்ளனர். இப்படம் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 22ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இப்படத்தின் புரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் மோகன்லால் தோன்றி, படத்தின் முதல் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு காரணத்தில் ஒன்றாக தனது நண்பர் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மோகன்லாலில் நண்பர் மம்மூட்டி இப்படத்தில் நடித்துள்ளதாக சமூக வலைதளங்கலில் வெளியாகியுள்ளது.
Follow Us