மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி 2’. இதில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்ககளைப் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் தற்போது பொங்கலை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியான ‘எம்கோனே’ பாடல் சர்ச்சையில் சிக்கியது. அதாவது இப்பாடலை பாடிய சின்மயி என்னுடைய கொள்கைக்கும் இதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது, அதற்காக வருந்துகிறேன். இதற்கு பதிலளித்த மோகன் ஜி, பொதுவெளியில் எந்த முகாந்திரமும் இல்லாமல் கலங்கம் ஏற்படுத்தியிருக்கிறார் எனக் கூறியிருந்தார். மேலும் இது குறித்து பதிலளிக்க இயக்குநர் சங்கத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அப்பாடலில் சின்மயி குரலை நீக்கிவிட்டு வேறஒரு பாடகியின் குரலை பயன்படுத்தியுள்ளார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் வெளியானது. சுல்தானிய மன்னர்கள் அவர்களின் நம்பிக்கையை இந்து மக்களிடம் திணிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. திடீரென பொங்கல் ரேஸில் இணைந்திருந்ததால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் தற்போது இப்படம் மீண்டும் ஜனவரி 23ஆம் தேதிக்கே தள்ளி போகிறது. 

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்க்கையில், “பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட எங்களின் முதல் படைப்பு திரெளபதி 2 திரைப்படம், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.

Advertisment

எங்களின் இந்த முடிவை பெரியமனதுடன் ஏற்று எப்போதும் போல உங்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு ரசிக பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.