Advertisment

‘திரௌபதி 2’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?

03 (7)

மோகன்.ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தின் முதல்  பாகம் கடந்த 2020ம் ஆண்டு வெளியானது. இப்படம் பொது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், கலவையான விமர்சனங்களை பெற்றது. வணிக ரீதியாக நல்ல வசூலை பெற்றதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட இழுபறிக்குப் பின்னர், ஜனவரி 23ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியான இரண்டாவது நாளில் படத்தின் இயக்குநர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  

Advertisment

அதில், “இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பின் மூலம் இந்த படத்தினை உருவாக்கியிருக்கிறோம். இருப்பினும், மங்காத்தா படம் தற்போது மறு வெளியீடு செய்யப்பட்டதால், அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இதனால், திரௌபதி 2 படம் மக்களிடம் சென்று சேரவில்லை. இந்த படம் வெளியானது கூட பலருக்கும் தெரியவில்லை. அதனால், இப்படத்தின் வசூல் மிக சொற்ப அளவிலேயே உள்ளது. எனவே, இந்த படத்தை பார்த்தவர்கள் படம் குறித்து மற்றவர்களிடம் பேசுங்கள் அல்லது காணொளி வெளியிடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.  அதாவது படத்தினை மக்களிடம் கொண்டு சேருங்கள் எனத் தெரிவித்திருந்தார்.  

Advertisment

இந்த நிலையில் படத்தின் வசூல் மிக மோசமான நிலையில் இருப்பதாக படத்தின் இயக்குநரே தெரிவித்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் பல பிரபலங்கள் அவரது வீடியோ குறித்து கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். அதே நேரத்தில், படத்தின் வசூல் குறித்தான தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படம் உலக அளவில் கடந்த நான்கு நாட்களில் 2.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படக்குழுவை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இனி வரும்காலங்களில் இப்படம் மக்களிடம் வரவேற்பை பெறுமா? என்ற கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.

Draupathi 2 mohan g
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe