நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் நேற்று தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடினார் இதை ஒட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் திரைப்படங்கள் ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர் அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யமின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!

Advertisment

நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்” என வாழ்த்திருந்தார். இதற்கு கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து, “நல்லாட்சியின் அடையாளமாய், நட்பின் இலக்கணமாய்த் திகழும் அன்புக்குரிய நண்பரே, முதல்வரே, உங்கள் வாழ்த்துடன் என் பிறந்தநாள் தொடங்குகிறது. அள்ளக்குறையாத அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Advertisment

இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கமல்ஹாசனை அவரது இல்லத்திற்கே சென்று நேரில் வாழ்த்தி உள்ளார். இதனை கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து மகிழ்ந்துள்ளார். அந்தப் பதிவில், “என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசனையும் கௌரவப்படுத்திய தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும்,  தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் சபரீஸனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு மூன்று தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு. நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment