1940 - 1950களி​ல் தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் என்.எஸ்கிருஷ்ணன். நடிப்பைத் தாண்டி பாடகராகவும் தயாரிப்​பாளராகவும் மற்றும் நாடகத் தயாரிப்​பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இந்தியாவின் சார்பி சாப்ளின் என்றும் கலைவானர் என்றும் என்.எஸ்கே ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.  

Advertisment

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் நெருங்கி பழகியவர். இவர் 1957ஆம் ஆண்டு காலமான நிலையில் 1969ஆம் ஆண்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் இவருக்கு சிலை திறக்கப்பட்டது. இதனை அன்றைய முதல்வர் அண்ணா திறந்து வைத்தார். பின்பு 1999ஆம் ஆண்​டு அங்கு மேம்​பாலம் கட்​டப்​பட்​ட​போது சிலை சாலை ஓரத்​தில் இடம் மாற்றி அமைக்​கப்​பட்​டது.

Advertisment

இதையடுத்து சிலையை கலை​வாணர் அரங்க வளாகத்​தினுள் மாற்​றியமைக்​க​அவரது குடும்​பத்​தினர் அரசிடம் கோரிக்கை வைத்​தனர். இந்த கோரிக்​கையை ஏற்​று, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்தரவு பிறப்பித்தார். அதன்​படி, கலை​வாணர் அரங்க வளாகத்​தில் ரூ.50 லட்​சம் மதிப்​பீட்​டில் புதுப்பிக்கப்பட்ட சிலை நிறுவப்பட்​டது. அந்த சிலையை இன்று முதல்வர் மு.கஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன் உள்ளிட்ட பலரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், கலைவாணர் குடும்பத்தினர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.