தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் மீரா வாசுதேவன். தமிழில் நாயகியாக உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்தி கப்பல் ஆகிய படங்கள் நடித்துள்ளார். மேலும் ஆட்டநாயகன், அடங்க மறு உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் விளம்பரத்திலும் நடித்த பிரபலமானார்.
இவர் விஷால் அகர்வால் என்பவரை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்பு 2008ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து நடிகர் ஜான் கொக்கேனை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து விப்பின் புதியங்கம் என்பவரை 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்த நிலையில் மூன்றாவது கணவரையும் பிரிந்து விட்டதாக மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் கடந்த ஆகஸ்டில் இருந்து தனியாக தான் இருக்கிறேன். இதை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். நான் என் வாழ்க்கையின் மிக அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் இருக்கிறேன்” என அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Follow Us