சமீப காலமாக இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் மாதவன். இடையில் டெஸ்ட் என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்திருந்தார் இப்படம் நேரடியாக ஒடிடியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தில் நடித்து வருகிறார். 

Advertisment

இதனிடையே 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு பயோ-பிக்கில் நடிக்கிறார். இந்தியாவின் எடிசன் என அழைக்கப்பட்ட தமிழக விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘ஜி.டி.என்’ எனும் தலைப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இப்படம் ஜி.டி.நாயுடு படைத்த சாதனைகளை பற்றி பேசவுள்ளது. முன்னதாக ஒரு போஸ்டர் வெளியாகி வைரலானது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ஜிடி நாயுடு கெட்டப்பில் மாதவன் மிரட்டுகிறார். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். சத்யராஜ், ஜெயரம், தம்பி ராமையா, பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இனைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.