மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’ திபாவளி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், அமீர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழு தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாகவுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் துருவ் விக்ரம், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் மாரி செல்வராஜ் பேசுகையில், “இந்த படத்திற்கு மூலக் காரணம் மணத்தி கனேஷ் அண்ணன் தான். அவர் தான் என்னுடைய சின்ன வயசு ஹீரோ. நான் கபடி வெறி பிடிச்சு அலையும் போது அவருடைய போஸ்டரை ஒட்டிருக்கேன், அவர் பேரை செவுத்துல எழுதியிருக்கேன். ஆனா பிற்காலத்துல அவருடைய வாழ்க்கையை படமா எடுப்பேன்னு நினைச்சு பார்க்கல. இந்த படத்தின் கதை திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்டத்துல இருந்து கிளம்பி வந்து கடும் உழைப்பாலும் திறமையாலும் பெரும் போராட்டங்களுக்கு இடையில வெற்றி பெற்ற நிறைய இளைஞர்களுடையது. அதுல இரண்டு பேர் நானும் மணத்தி கனேசன் அண்ணனும். 

Advertisment

கணேசன் அண்ணனிடம் முதல் தடவை பேசுனப்போ, உங்க கதையை மூலமா வச்சிக்கிட்டு, நம்ம இளைஞர்களுக்கு ஒரு கதை சொல்ல ஆசைப்படுறேன். அதை என்னுடைய ஸ்டைல்ல, என்னுடைய அரசியல் பார்வையில, என்னுடைய புரிதல்ல சொல்ல உங்களுடைய ஒத்துழைப்பு வேணும்னு கேட்டேன். அதற்கு அவர் நீ செஞ்சா கரெக்டாத்தான் செய்வன்னு ஒத்துழைப்பு கொடுத்தார். என்னைய நம்பி அவருடைய கபடியையும் வெற்றியையும் கொடுத்தாரு. அதுமட்டுமில்லாம படப்பிடிப்பல அவ்ளோ உதவி பண்னியிருக்கார். அவர் இல்லைன்னா இந்த படத்தை எடுத்துருக்கவே முடியாது. அந்தளவு ஒரு பெரிய தூணா இருந்தார். அவருக்கு நான் என்ன மாதிரி கதை பன்னிட்டு இருக்கேன்னு தெரியாது. ஆனா ஏதோ நம்ம கபடியை வச்சி படம் எடுத்துட்டு இருக்கான்னு மட்டும் தெரியும். என் மேல முழு நம்பிக்கை வச்சு உடனிருந்தார். எல்லாரும் படத்தை பார்த்துட்டு வெற்றிபெறும்னு பாராட்டுனாங்க. ஆனா இவர் பார்த்துட்டு கட்டி பிடிச்சதுதான் பெரிய வெற்றியா நான் பார்க்குறேன். 

பரியேறும் பெருமாள் படத்தை ரஞ்சித் அண்ணன் பார்த்துட்டு லவ் யூ-னு மெசேஜ் பண்னார். அந்த நாள்ல இருந்து என்னுடைய பயணம் தொடங்குனுச்சு. அதுக்கப்புறம் தான் எல்லாத்தையும் நம்பிக்கையா பண்ண ஆரம்பிச்சேன். நீலம் புரொடக்‌ஷனுக்கு உடனே படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். ஆனா தள்ளி தள்ளி போனுச்சு. அது ஒரு வலியாவும் குற்ற உணர்ச்சியாவும் இருந்துகிட்டே இருந்துச்சு. வாழ்க்கையில பெரிய தப்பு பண்ணிட்டோமோன்னு தோனிட்டே இருக்கும். பைசன் படம் ஆரம்பிக்கும் போது ரஞ்சித்திடம் வேற எதாச்சும் படம் பண்லாமா, இந்த படம் பெரிய பட்ஜெட், அதனால நமக்குள்ள சண்டை வந்துடுமோன்னு பயமா இருக்குன்னு சொன்னேன். ஆனா அவர், நம்ம இரண்டு பேரும் திருப்பியும் சேர்ந்திருக்கோம், இந்த மாதிரியான ஒரு படம் தான் நம்ம தமிழ் சமூகத்துக்கு நாம கொடுக்கனும்னு சொன்னார். எனக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்தார்.   

Advertisment

என்னுடைய வாழ்க்கையில் நிறைய ட்ராவல் பண்ணி ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திச்சு வெளியே வந்துட்டன். நான் வந்து 20 வருஷம் ஆகப்போது. இப்போது அந்த பயணத்தை திரும்பி பார்த்தா, உங்க ஊரு என்ன இப்படி இருக்குன்னு கேப்பாங்க. அதனால ஒவ்வொரு முறையும் ஊருக்கும் போகும்போதெல்லாம் பக்குபக்குன்னு இருக்கும். ஊரில் நடக்கும் பிர்ச்சனைகளை கேள்விபடும் போது ரொம்ப எமோஷ்னலா இருக்கும். இதை எப்படி மாற்றுவது என தோனிட்டே இருக்கும். அதுக்கு கிடைச்ச ஒரு கருவி தான் கனேசன் அண்ணன் கதை. அவர எடுத்துக்குட்டு என்னுடைய அரசியலை வைச்சு ஒரு படம் எடுத்து அதுல எதாவது பண்ண முடியுமான்னு பார்ப்போம் என எழுதப்பட்டது தான் பைசன் திரைக்கதை. இந்த படத்துல தென்மாவட்டத்துல இருக்குற நிறைய இளைஞர்கள் இருக்காங்க. இதுல வெற்றி பெற்றவஙகளும் இருக்காங்க, தோல்வியடைஞ்சவங்களும் இருக்காங்க. நான் இவ்வளவு வெற்றி அடைஞ்சும் புகழ் பெற்றும் பணம் சம்பாதிச்சும் என்கிட்ட நீ உன் ஊருக்காக என்ன பன்னன்னு கேட்டாங்கன்னா அது இந்த படம் தான் என் சொல்வேன். என்னுடைய ஊருக்காகவும் மாவட்டத்துக்காகவும் மக்களுக்காகவும் ஒட்டுமொத்த தென் தமிழ்நாட்டுக்காகவும் அங்கு இருக்கிற அரசியல் புரிதலை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருக்கேன். இது என்ன மாதிரியான தாக்கத்தையும் விவாதத்தையும் உருவாக்கும் என்பதை பார்க்கத்தான் வெயிட் பன்றேன். என்னுடைய உச்சபட்ச பெருமையாக இந்த படத்தை பாக்கறேன். என்னுடைய மத்த படத்தை விட இந்த படம் ரொம்ப பிரஷரா இருந்தேன். நிறைய வேலை பார்த்தேன். 

இந்த படம் தீபாவளிக்கு வரும்னு நினைச்சே பார்க்கல. என்னுடைய வாழ்க்கைல தீபாவளி பண்டிகை எனபது முக்கியமான பண்டிகையே கிடையாது. அதற்கான காரணம், எங்க வீட்டில் அதற்கான மனநிலையே இருக்காது. அது தொடர்பாக் கூட பால்ய நண்பனின் மரணத்தின் நினைவை போல் கடந்து செல்கிறது தீபாவளி என ஒரு கவைதையை எழுதியிருப்பேன். தீபாவளி மேல் அவ்வளவு வெறுப்பு இருந்தது. ஆனால் முதல் முறை இப்போ தீபாவளியை கொண்டாடப்போறேன்னு நினைக்கிறேன்” என்றார்.