Advertisment

“உங்கள் மூச்சுக்காற்று முடிவுற்றதில்...” - மாரி செல்வராஜ் உருக்கம்

14 (69)

வயது மூப்பு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) நேற்று(25-02-26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி எம்.பி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர் ரஞ்சித், கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்பு நல்லகண்ணு குறித்து எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட அவர், “தோழமையே, உங்கள் மூச்சுக்காற்று முடிவுற்றதில், பறக்க மறந்து திகைத்து நிற்கிறது செங்கொடி. இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற அரசியல் அடையாளம்... தமிழினத்தின் அறப்பெருமை... எங்கள் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம். ஒரு ரயில்பாதைக்கு அப்புறமும் இப்புறமாக ஒரே மண்ணில் உங்களோடு வாழ்ந்த நினைவு எப்போதும் அகலாது. எங்கள் இதயங்களில் போராட்டகுணமாய் என்றும் நிலைத்திருப்பீர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe