இயக்குநர் மாரி செல்வராஜ் கடைசியாக பைசன் படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து தனுஷ் படத்தை இயக்கவுள்ளார். மேலும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். 

Advertisment

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன அதில் ஒன்றாக திமுகவிற்கு பிரச்சார பாடல் எழுதுகிறீர்களா என்றும் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்றும் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், “நான் கரோனா சமயத்தில் நான்கு படங்கள் ஒப்பந்தம் செய்தேன். நான்கு படங்களுமே என் கரியரில் ரொம்ப முக்கியமான படங்கள். ஆனால் அந்த சமயத்தில் ரெண்டு வருஷமாக படம் இயக்க முடியாம போனது. அதனால் அது தள்ளிக் கொண்டே போகிறது. 

Advertisment

நான் ரொம்ப சீரியசாக சொல்கிறேன், கலையைத் தான் என்னுடைய பெரும் ஆயுதமாக கருதுகிறேன். அரசியலாக எனக்கு முன்னாடி நிறைய முன்னோர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய வடிவங்களில் மக்களிடம் கருத்தை பதிவு செய்த வருகிறார்கள். சமூக மாற்றத்திற்கும் சமநிலை உருவாக்கத்திற்கும் போராடுகிறார்கள். அதில் இன்னொரு வடிவமாக நான் கலையை தேர்ந்தெடுத்துள்ளேன். சினிமாவை மிகவும் நேசித்து அதற்காக நிறைய வலிகளை கடந்து 18 வருஷம் சினிமாவில் பயணதிருக்கிறேன். அதனால் சினிமாவுக்குள்ளேயே நான் சொல்லி முடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதில் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என முயற்சி செய்கிறேன். 

அரசியலில் நான் சிறுவயதில் இருந்தே இருக்கிறேன். எங்கள் ஊரில் நடந்த நிகழ்வுகளின் வழியாக அதற்குள் அப்போதே சென்று விட்டேன். நான் சட்டப்படிப்பு படிக்கும்போது தீவிர அரசியலில் ஈடுபட்டேன், அதற்காக வழக்கும் வாங்கி இருக்கிறேன். நிறைய வீட்டில் அடியும் மிதியும் வாங்கியிருக்கேன். அதனால் அதிலிருந்து இன்னொரு வடிவமாக தேர்ந்தெடுத்தது தான் கலை. அதனால் திருப்பியும் அரசியலுக்கு இப்போதைக்கு நுழைய மாட்டேன். சினிமாவில் தீவிரமாக இயங்க நினைக்கிறேன். அது வழியாக நிறைய பேரிடம் உரையாட விரும்புகிறேன்” என்றார். 

Advertisment