மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. 

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி பல கட்டங்களாக நடந்து கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் வெளியானது. படம் அக்டோபர் 17ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் படம் நன்றாக இருப்பதாக முழுப்படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் படக்குழுவை பாராட்டியிருந்தார். இதுவரையில் படத்தில் இருந்து ‘தீக்கொளுத்தி’, ‘றெக்க றெக்க’, ‘சீனிக்கல்லு’, ‘தென்நாடு’ மற்றும் ‘காளமாடன் கானம்’என ஐந்து பாடல்கள் வெளியாகியுள்ளது.  படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இதில் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். 

Advertisment

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று இரவு 7 மணிக்கு என்று மாற்றப்பட்டது, இதற்காக மாரி செல்வராஜ் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து 7 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 8 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்து பணி தொடர்பான புகைப்படம் ஒன்றையும் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். அதன் பின்னணியில் பசுபதியும் ஒரு ஆடும் நின்று கொண்டிருக்க ‘பதறும் வாழ்வு’ என இருவருக்கு நடுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ட்ரெய்லர் தாமதமாகி வருவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

Advertisment