தமிழக அரசு, இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அறிவித்திருந்தது. இந்த விருது வழங்கும் விழா பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விருதை பெற்றுக் கொண்ட மாரி செல்வராஜ் மேடையில் பெரியார் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார்.
அவர் பேசியதாவது, “பெரியாரைப் படிக்க படிக்க அவரை எதிர்த்துப் பேசியே பெரிய ஆளாக மாறலாம். அதாவது நன்றாக பேச கற்றுக் கொள்ளலாம். அவர்களைப் பற்றி பேசும் போது தான் நீங்கள் பெரிய ஆளாக மாற முடியும். நீங்கள் யாரிடம் கற்றுக் கொண்டீர்களோ அவர்களை மீற வேண்டும். இந்த ஆசை எல்லோருக்கும் இருக்கும். நான் ராம் சாரிடம் கற்றுக் கொள்ளும் போது, அவர் என்னிடம், ‘நீ என்னை விட பெரிய டைரக்டர் ஆகணும், அப்போதுதான் நான் உனக்கு சரியாக கற்றுக் கொடுத்திருக்கிறேன் என்று அர்த்தம்’ என்று சொல்வார்.
பெரியாரை விட மிக பெரிய சிந்தனையாளராக ஆக வேண்டும் என்றால் பெரியாரை திட்டி நிருப்பிக்க கூடாது. அவரை திட்டுவதன் மூலம் நான் பெரிய சிந்தனையாளராக மாறிவிட முடியாது. பெரியாரைப் புரிந்து கொள்வது சாதாரணமான விஷயம் கிடையாது. அவர் எப்போதும் நம்மை மேம்படுத்துவதற்கான விஷயங்களையே சொல்லி இருக்கிறார். அவரை புரிந்து கொண்டு பேச வேண்டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/13-30-2026-01-19-19-42-39.jpg)