மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் இன்று(17.10.2025) தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Advertisment

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தை விக்ரம், துருவ், அனுபமா, ரஜிஷா விஜயன், ஆகியோர் ரசிகர்களுடன் திரையரங்கிற்கு சென்று பார்த்தனர். மேலும் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்தும் திரையரங்கு சென்று பார்த்தனர். பின்பு மாரி செல்வராஜிடம் செய்தியாளர்கள் பட வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பினர். 

Advertisment

அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், “ரொம்ப எமோஷ்னலா இருக்கு. இந்த படத்தை எதுக்காக எடுத்தோமோ அந்த நோக்கம் நிறைவேறிடுச்சின்னு நினைக்கிறேன். ரொம்ப நாளா அழுத்திக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை சொல்லனும்னு நினைச்சு நிறைய உழைச்சேன். என்னோட சேர்ந்து நிறைய பேர் உழைச்சிருக்காங்க. அந்த உழைபுக்கு பெரிய வெற்றி கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்” என்றார்.