நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் படத்திற்கு சான்று வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. பின்பு மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை மீண்டும் விசாரித்து புதிய உத்தரவை பிறப்பிக்க தீர்ப்பு வழங்கியது. இதனால் பட வெளியீடு தொடர்ந்து தள்ளிக்கொண்டே போகிறது.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “விஜய் ஒரு மாஸ் ஹீரோ. பொங்கலுக்கு வராமல் பின்பு பக்ரீத்துக்கு வர முடியும். இந்த படத்துக்கு நடந்தது மிகப்பெரிய கொடுமை. அதில் என்ன அரசியல் நடக்குது என தெரியவில்லை. நீதிமன்றம்னு சொல்றாங்க ஜட்ஜ்மெண்ட்னு சொல்றாங்க... என்னடா நடக்குது இந்த நாட்டுல. யாரா இருந்தாலும் சினிமா என்ற குடும்பத்தில் யாரும் பாதிக்கப்படக்கூடாது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எத்தனை ஆயிரம் கோடி போட்டிருப்பார்.
ஏதோ ஒன்னு தவறு இருக்கு. அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வேதனையை தான் சொல்கிறேன். என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க. நான் நியாயத்து பக்கம் எப்போதும் இருப்பேன். மற்றது எல்லாம் அப்பாற்பட்டது. பிரியாணின்னா அப்போதே சாப்பிட வேண்டும். பிரிட்ஜில் வைத்து நாலு நாள் கழித்து சாப்பிடுக்குடாது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/28/16-44-2026-01-28-17-28-29.jpg)