மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.55 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தொடங்கி, இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், வசந்தபாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ வாழ்த்தியிருந்தனர். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராடியிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்திற்கு இயக்குநர் மணிரத்னம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் “ஹாய் மாறி, இப்போது தான் படத்தை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் தான் பைசன். உங்கள் பணியை நினைத்து பெருமைப் படுகிறேன். இதையே தொடருங்கள். உங்களது குரல் முக்கியம்” என மணிரத்தினம் பாராட்டிதாக குறிப்பிட்டவர் அவருக்கு நன்றி தெரிவிக்கையில், “பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வாத்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/29/20-4-2025-10-29-10-52-27.jpg)