லட்சுமிப்பிரியா தேவி இயக்கத்தில் குகன் கிப்கென், பாலா ஹிஜாம், விக்ரம் கோச்சார் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘பூங்’. மணிப்பூரி மொழி படமான இப்படத்தை பர்ஹான் அக்தர் ‘எக்செல் என்டர்டெயின்மென்ட்’ எனும் பேனரில் தயாரித்துள்ளார். ஜூபின் பலபோரியா மற்றும் அக்கு சிங்கங்பாம் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
மணிப்பூரில் நடக்கும் சமூக பதற்றங்களுக்கு மத்தியில் தந்தையை தேடும் ஒரு குழந்தையின் பயணத்தை இந்த படம் காட்டுகிறது. இப்படம் 2024 டோரண்டா சர்வதேச திரைப்பட விழா, 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட இன்னும் சில சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இதை தொடர்ந்துர் இங்கிலாந்தில் நடைபெறும் மதிப்புமிக்க விருதான பாஃப்டா விருதுக்கு அனுப்பப்பட்டது. இப்படம் தற்போது ‘சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படம்’ என்ற பிரிவில் விருது வென்றுள்ளது. இந்த விருது வென்ற முதல் இந்தியம் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. ஆர்கோ, லிலோ, ஸ்டிட்ச் மற்றும் ஜூட்ரோபோலிஸ் 2 போன்ற பிரபல படங்களுக்கு மத்தியில் இவ்விருதை பூங் படம் வென்றுள்ளது சர்வதேச கவனத்த ஈர்த்துள்ளது.
விருதை பெற்றுக்கொண்ட இயக்குநர் லட்சுமிப்பிரியா தேவி, இவ்விருதை தனது தாய் நிலமான மணிப்பூருக்கு சமர்பிப்பதாகவும் அங்கு மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியான தருணம், குறிப்பாக மணிப்பூருக்கு. இது நமது நாட்டின் மகத்தான படைப்புத் திறமையை எடுத்துக்காட்டுகிறது” என்றுள்ளார்.
Follow Us