மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' திட்டம், நேற்று விழாவுடன் தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ‘குட் நைட்’ மணிகண்டனும் கலந்து கொண்டார்.  
  
அவர் மேடையில் பேசியதாவது, “தனது ஆற்றலுக்கான வசதி வாய்ப்புகள் கிடைக்காமல் ஒரு மனிதன் இருக்கிறான் என்றால் அதைவிட பெரிய சோகம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அது மாதிரி எத்தனையோ திறமைகள் இருந்தும் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாத மனிதர்களை நான் கண்முன் பார்த்திருக்கிறேன். இனிமேல் அது மாதிரியான பெரும் சோகங்கள் நடக்கக்கூடாது என பல்வேறு நல்ல திட்டங்கள் இங்கு உருவாகியிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய நன்றி. குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் ஏகப்பட்ட திட்டங்களை நான் பார்க்கிறேன். 

Advertisment

உலகளவில் ஒரு அரசு தங்களுடைய மூலதனமாக எதை நம்புகிறது என்பது முக்கியம். இதுவரை பயம், மிரட்டல், பக்தி, பணம் என ஏகப்பட்ட விஷயங்களை ஒரு அரசு மூலதனமாக நம்பியிருக்கிறது. ஆனால் அறிவு மற்றும் கல்வியை நம்முடைய இந்த திராவிட மாடல் அரசு, நம்புகிறது. அதுக்கு முக்கிய சான்றாக எது இருக்கப் போகிறதென்றால், இன்றைக்கு போடும் விதை. அது இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டை எங்கு கொண்டு போகும் என்பதை பார்ப்போம்” என்றார்.  

Advertisment