வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அஜித்தின் 50 ஆவது படமாக அமைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அஜித்தோடு, அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவரது இசையில் வெளியான பாடல்களும் குறிப்பாக தீம் மியூசிக்கும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையை இப்படம் 14 ஆண்டுகள் கழித்து உலகமெங்கும் ரீ ரிலீஸாகிறது. வரும் 23ஆம் தேதி வெளியாகும் நிலையில் அதற்கான ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு தள புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு, “நாளை மறுநாள் திரையரங்குகளில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்” என தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த சூழலில் படத்திற்கான ரீ ரிலீஸ் டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ.1.5 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரீ ரிலீஸான ரஜினியின் படையப்பா,விஜய்யின் கில்லி நல்ல வசூல் ஈட்டியது என குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/21/14-46-2026-01-21-19-15-14.jpg)