55வது கேரள மாநில திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை பிரமயுகம் படத்திற்காக மம்முட்டி பெற்றுக்கொண்டார். இவ்விருதை கேரள முதல்வர் பினராய் விஜயன் கையில் அவர் பெற்றுக் கொண்டார். இதற்காக கேரளா அரசுக்கும் அவருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார். இதன் மூலம் 10வது முறை கேரள விருதை அவர் பெற்றுள்ளார்.
மலையாளத்தில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட சிலர் மட்டுமே நடித்திருந்த திரைப்படம் ‘பிரமயுகம்’. இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த நிலையில் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருந்தார்.
ஹாரர் திரில்லர் ஜானரில் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ரூ.85 கோடி ஈட்டியது. இது அந்த ஆண்டின் அதிக வசூலித்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படம் ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி இப்படம் திரையிடப்படுகிறது.
Follow Us