மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ஜித்தின் ஜோஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் களம்காவல். இதில் விநாயகன், ஜிபின் கோபிநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் மம்மூட்டி தயாரித்தும் உள்ளார். முஜீப் மஜீத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்மூட்டி படம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின்பு விநாயகன் மேடைக்கு அழைக்கப்பட்ட போது, மரியாதை கலந்த தயக்கத்துடனே மேடைக்கு வந்த அவர் மம்மூட்டியிடம் ஆசி பெற்றார். பின்பு பேசிய அவர், “எனக்கு எப்படி பேசுவது என்று தெரியாது. அது உங்களுக்கும் தெரியும்” என்று பணிவுடன் கூறினார். உடனே குறுக்கிட்ட மம்முட்டி, “உங்களுக்கு எப்படி பேசுவது என்று தான் தெரியாது, ஆனால் எப்படி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று தெரியும்” என்றார்.
தொடர்ந்து விநாயகன் குறித்து பேசிய அவர், “வகுப்பில் ஒரு பையன் குறும்பு செய்தாலும் அவனை எல்லோரும் நேசிப்போம். அது போலத்தான் விநாயகனும். அவர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அவரிடம் அனைவரும் நேசிக்கும் குணமும் இருக்கிறது” என்றார்.
Follow Us