மலையாளத்தில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட சிலர் மட்டுமே நடித்திருந்த திரைப்படம் ‘பிரமயுகம்’. இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த நிலையில் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருந்தார். 

Advertisment

ஹாரர் திரில்லர் ஜானரில் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ரூ.85 கோடி ஈட்டியது. இது அந்த ஆண்டின் அதிக வசூலித்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்திற்காக சமீபத்தில் மம்முட்டி கேரள மாநில திரைப்பட விருதை வென்றிருந்தார். 

Advertisment

08 (6)

இந்த நிலையில் இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் இப்படம் திரையிடப்பட தேர்வாகியுள்ளது. இதில் திரையிடப்படும் ஒரே இந்திய படம் இப்படம் தான். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.