பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள ‘டியூட்’ படம் தீபாவளியை முன்னிட்டு இன்று(17.10.2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற பாடல்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் இன்று ரசிகர்களுடன் படம் பார்க்க சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் சென்று பிரதீப் ரங்கநாதன்,கீர்த்திஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் பார்த்து ரசித்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்ப்பு கொடுத்தனர். இதனிடையே கடந்த சில வாரங்களாக படக்குழுவினர் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் கேரளாவில் நடிகை மமிதா பைஜூ ஈடுபட்டிருந்தார்.
நிகழ்ச்சியில் ஊரும் ப்ளட் பாடலுக்கு நடனக் கலைஞர்களுடன் மேடையில் நடனமாடினார். பின்பு அவர் கையில் கொண்ட்டாட்டத்திற்காக பயன்படுத்தப்படும் ‘ஃபயர் கன்’(நெருப்பு வரும் துப்பாக்கி) கொடுக்கப்பட்டது. ஆனால் அதைப் பார்த்து பயந்த மமிதா பைஜூ, அந்த பயத்துடனே கையாண்டார். அப்போது அதில் வரும் நெருப்பு கீழே இருந்த சிலர் மீது பட, உடனடியாக அந்த ஃபயர் கன்னை நிறுத்தும் நோக்கில் எடுத்து சென்றுவிட்டார். இது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
വെട്ടം സിനിമയിൽ Climax ജഗതി ചേട്ടന്റെ കയ്യിൽ Ak47 തോക്ക് കിട്ടിയപ്പോൾ ഉണ്ടായ സീൻ പോലെ ഉണ്ട്...😹😹😹🔥@_mamithabaiju#Mamithabaiju#Dudepic.twitter.com/fRDf3DMqQk
— Anantha_vishnu (@Ananthuavj) October 16, 2025