மலையாளத்தில் நடிகராக வலம் வந்தவர் கமல்ராஜ். ஆனால் தமிழில் தான் தனது நடிப்பு கரியரை ஆரம்பித்தார். ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருந்தார்.
பின்பு மலையாளத்தில் சாயுஜ்யம், கொல்லிலகம், மஞ்சு, கிங்கினி, கல்யாண சௌகந்திகம், வாசலம், ஷோபனம், தி கிங் மேக்கர், லீடர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக கல்யாண சௌகந்திகத்தில் அவர் நடித்திருந்த வில்லத்தனமான கதாபாத்திரம் பலரது பாராட்டை பெற்றது. இந்த நிலையில் அவர் இன்று காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணம் என சொல்லப்படுகிறது.
இவருக்கு வயது 54. இவரது மறைவு தற்போது மலையாள மற்றும் தமிழ் திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி பல்வேறு திரைப்பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் பிரபல நடிகைகள் ஊர்வசி, கல்பனா, கலாரஞ்சினி ஆகியோரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us