பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். விஷ்வ பிரசாத் தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் வெளியாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படம் கடந்த 5ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் படம் பார்த்த பலரும் ஸ்டண்ட் காட்சிகள் குறித்து விமர்சித்து வந்தனர். அதாவது மாளவிகா மோகனன் ஸ்டண்ட் காட்சிகளில் டுப் போட்டு நடித்துவிட்டு ரியலாக நடிப்பதாக சொல்வதாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் விமர்சனத்துக்கு மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தி ராஜா சாப் படத்தில் நான் ஸ்டாண்ட் செய்தது குறித்து நிறைய பதிவுகளையும் கட்டுரைகளையும் பார்த்து வருகிறேன். அதில் எனது ஸ்டண்ட் டபுள்தான் இந்த ஸ்டண்டை செய்வதாக அவரது புகைப்படம் வைரலானது. முதலில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது நான் ஆக்ஷன் செய்வதை மிகவும் ரசிக்கிறேன். ஏனென்றால் அது எனக்கு சிறு வயதிலிருந்தே பிடிக்கும். மேலும் உடல்ரீதியான சவாலை செய்து அதிலிருந்து கற்றுக் கொள்ளும் புது விஷயங்களையும் பிடிக்கும்.
இரண்டாவதாக நடிகர்கள் தங்கள் சொந்த ஸ்டென்களை செய்யும்போது படப்பிடிப்பு தளங்களில் எப்போதும் ஒரு ஸ்டெண்ட் டபுள் இருப்பார். அவர்கள் இறுதி ஷாட்டை எடுப்பதற்கு முன் ஒத்திகை பார்ப்பர், அல்லது சில ஷாட்களில் நடிகர் செய்வது மிகவும் ஆபத்தாக அவர்கள் உணர்ந்தால் அவர்களே நடிப்பார்கள். அதனால் எதையும் அதன் ஆபத்தை உணராமல் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தில் அவர் நடித்த ஸ்டண்ட் காட்சிகளின் படப்பிடிப்பு தள வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதைவிட ஸ்டண்ட் டபுளுக்கு தனது அன்பையும் தெரிவித்துள்ளார்.
Been seeing a lot of tweets and articles about how I claimed to do my own stunts for ‘The Rajasaab’ but a body double did it as there’s a photo circulating online of a stunt artist who was my stunt double on the film.
— Malavika Mohanan (@MalavikaM_) February 13, 2026
Firstly, I do action because I really enjoy doing action.… pic.twitter.com/9ePwlLpti4
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/14/50-2026-02-14-19-22-25.jpg)