பிரபல நடிகையான மாளவிகா மோகனன் கடைசியாக ஹிருதயபூர்வம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இதில் மோகன்லாலுடன் நடித்திருந்தார். இவர் 32 வயது இருக்கும் நிலையில் 62 வயதுள்ள மோகன்லாலுடன் நடித்திருந்தது சில விமர்சனங்களை சந்தித்தது. இப்படத்தை தவிர்த்து தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதை தவிர்த்து தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் இவர் தெலுங்கில் சிரஞ்சீவி - பாபி கூட்டணியில் உருவாகும் சிரஞ்சீவியின் 158வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை தற்போது மாளவிகா மோகன் மருத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் “பாபி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 158ஆவது படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதாக ஆன்லைனில் தகவல்கள் பரவி வருகிறது.
என் வாழ்க்கையில் என்றாவது ஒரு கட்டத்தில் பெரிய நட்சத்திரமான சிரஞ்சீவி சாருடன் ஸ்கிரீனை பகிர்ந்து கொள்வது விருப்பம் தான். ஆனால் அது இந்தப் படத்தில் இல்லை. அதனால் பரவி வரும் செய்தி தவறானது என்பதை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” எனக் குறிபிட்டுள்ளார்.
Follow Us