பிரபல நடிகையான மாளவிகா மோகனன் கடைசியாக ஹிருதயபூர்வம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து பிரபாஸ் நடிப்பில் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இதை தவிர்த்து தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். 

Advertisment

இதில் தி ராஜா சாப் படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனின் இவரது கதாபாத்திர போஸ்டர் நேற்று வெளியாகியிருந்தது. அதில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது. 

Advertisment

இந்த நிலையில் மாளவிகா மோகனன், விஜயின் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “என்னுடைய படத்தின் நிகழ்ச்சிக்கு முன் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக எனது சந்தோஷத்தை இந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். விஜய் சாருடன் பணியாற்றியது ஒரு பெரும் பாக்கியம். மேலும் அவரை ஒரு நண்பர் என்று அழைப்பது அதைவிட பெரிய பாக்கியம். அவர் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மனிதர். உலகில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் அவருக்கும் அவரது படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதும் எப்போதும் விஜய் ரசிகை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இவர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது. விஜய்யின் ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment