தமிழ் சினிமாவில் மாஸ்டர் படத்தின் மூலமாக நன்கு அறியப்பட்டவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் ‘பட்டம் பாலே’ என்ற மலையாள படத்தின் மூலமாகத் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். பின்னர் இந்தி, கன்னடம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ படத்தின் மூலமாக அறிமுகமான இவர், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது இவர் சர்தார் 2, படத்தில் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இவரது புகைப்படங்கள் சமீப காலங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றன. காரணம், இவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அது மட்டுமல்லாமல், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் கவர்ச்சி உடையிலேயே காட்சியளிக்கிறார்,
இது குறித்து அவர் கூறுகையில், “கதாநாயகிகளுக்குத் தேவையானது ரசிகர்களும், ரசனையும் தான். அந்த வகையில், என் ரசிகர்களின் ரசனைகளுக்காக, என் உடைகள் மீது நான் கவனம் செலுத்தி வருகிறேன். என்னைப் பார்ப்போரின் கண்களை ஈர்ப்பதே என் நோக்கம். அதனால், எனது ஒவ்வொரு ஆடையையும் நான் கவனமாகத் தேர்வு செய்கிறேன். மேலும், எனது ஆடைகளுக்கும், எனது அழகிற்கும் குவியும் ரசிகர்களின் கமெண்ட்களை நான் ரசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/03/04-10-2026-02-03-19-18-32.jpg)