தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ‘பேட்ட’ படத்தின் மூலமாக அறிமுகமான இவர், தொடர்ந்து மாஸ்டர், மாறன், தங்கலான் என நடித்து பிரபலமானார். இப்போது கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’, விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு மொழிகளில் நடிப்பது குறித்து மாளவிகா மோகனன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இன்றைய காலத்தில் சினிமாவிற்கு எல்லைகள் என்பதே கிடையாது. நமக்குத் திறமை இருந்தால் போதும், எந்த மொழி சினிமாவிலும், எந்த மொழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிக பெரிய அளவில் வெற்றி பெறலாம். திறமை மட்டும் இருந்தால் போதும், பெருமை நம்மைத் தேடி வரும். சினிமாவில் வெற்றியும் தோல்வியும் இயல்பு தான்.
ஆனால், அதே நேரத்தில் நமது மனநிலையும், படத் தேர்வுகளும், நம் கதாபாத்திரங்களின் உறுதித்தன்மையும் நம்மை மக்களின் மனதில் நிலைபெறச் செய்யும். அந்த வகையில் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை தான்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/386-2026-03-06-17-14-30.jpg)