Advertisment

மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

A

Rocks Nature Entertainment வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படம் மகரம். ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 

Advertisment

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

Advertisment

இந்நிகழ்வினில்.., இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன் பேசியதாவது.., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆடிடோரியத்தில் சதூர் படத்துக்காக  நடந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் சந்தித்தோம். இன்று மீண்டும் இங்கே நிற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த அணியுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. முதலில் எங்கள் இயக்குநர் அகஸ்டின் பிரபுவுக்கும் தயாரிப்பாளருக்கும் என் நன்றி. அவர்களின் நம்பிக்கையும் முயற்சியுமே இந்த திட்டத்தை சாத்தியமாக்கியது. புதிய டீமாக இருந்தாலும், வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து தைரியமாக செயல்பட்டுள்ளோம்.

இந்த டீமின்  முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். திரைப்படம் முழுவதும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடல் காட்சிகளில் பல அபாயங்களை எதிர்கொண்டு படமாக்கியுள்ளனர். அதிலும் தரத்தில் எந்த சமரசமும் செய்யவில்லை. இந்த படம் கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒன்று. அனைவரும் உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

teaser tamilcinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe