திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது 1929ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு 98வது ஆஸ்கர் விருது விழா நடக்கவுள்ளது. இதில் ஆங்கில மொழி அல்லாது மற்ற மொழி படங்களுக்கு சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தங்களது நாட்டின் அதிகாரப்பூர்வ படம் என ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து இந்தி படமான ‘ஹோம்பவுண்ட்’(Homebound) படத்தை அனுப்ப தேர்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் சிறந்த அனிமேஷன் படப் பிரிவிற்கான தகுதிப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய படமான ‘மகாவதார் நரசிம்மா’ படம் இடம்பெற்றுள்ளது. இதற்கான இறுதி நாமினேஷன் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படவுள்ளது.
‘
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/26/19-26-2025-11-26-11-24-14.jpg)
மகாவதார் நரசிம்மா’ படம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார் தயாரிப்பில் கடந்த ஜூலை 25ஆம் தேதி வெளியானது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொத்தம் ஐந்து மொழிகளில் 2டி மற்றும் 3டி வெர்ஷனில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் ரூ.100 கோடிகளை கடந்து சாதனை படைத்தது. இதன் மூலம் ரூ.100கோடி கிளப்பில் இணைந்த முதல் இந்திய அனிமேஷன் படம் என்ற பெயரை இப்படம் பெற்றது. இப்போது இன்னொரு ஒரு சாதனையாக ஆஸ்கர் ரேஸில் போட்டியிடுகிறது.
Follow Us