கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் மகான். இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக தந்தையோடு இணைந்து நடித்திருந்தார். இவரை தவிர்த்து பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்திருந்த இப்பபடத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். குறிப்பாக நான் நான் பாடலில் வரும் அரியாசனம் பகுதி ரீல்ஸில் ட்ரெண்டானது. 

Advertisment

நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இது தொடர்பாக அவர் கூறுகையில், “மகான் 2 படத்துக்கு ஒரு சின்ன ஐடியா இருக்கு. ஆனால் நான் இன்னும் எழுத வேண்டும். 2027 அல்லது 2028-ல் பட வேலைகள் தொடங்கும்” என்றார். இதனால் ரசிகர்கள் பார்ட் 2 படத்தை எதிர்பார்க்கின்றனர். 

Advertisment

16 (57)

கார்த்திக் சுப்புராஜ் தற்போது சுயாதீன படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு மகான் 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விக்ரமும் தற்போது, அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதால் அதை முடித்து விட்டு மகான் 2-வில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.