கும்கி பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார் பிரபு சாலமன். இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தவல் காடா தயாரிப்பில் பென் ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் நவம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ‘கும்கி 2’ படத்தை எதிர்த்து சினிமா பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனதில் ‘கும்கி 2 படத்தை தயாரிக்க பிரபு சாலமன் 2018 ஆம் ஆண்டு 1.5 கோடி தன்னிடம் கடன் பெற்று இருந்தார். அப்போது வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பி தந்து விடுவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி வட்டியுடன் சேர்த்து 2.5 கோடி தர வேண்டும். ஆனால் அதைத் தராமல் கும்கி 2 படத்தை நவம்பர் 14ஆம் தேதி வெளியிடவுள்ளார். இதனால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் திடீரென இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
Follow Us