பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலையில் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் நான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மகளிர் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஜாய் சிரிசில்டாவிடமும் மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டாவும் ஜாய் சிரிசில்டாவிற்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மகளிர் ஆணையம், மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை ஆணையருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கும் ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பியது. அதில் ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தான் தான் தந்தை என அவரிடம் நடந்த விசாரனையில் அவர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டார். மேலும் விளக்கமளித்தார். டிஎன்ஏ டெஸ்ட் மூலம் குழந்தை தன்னுடையது என நிரூபிக்கப்பட்டால் அக்குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள தயாராகவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்ந்து அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர முன்னதாக ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த ஒரு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதாவது ஜாய் கிரிசில்டா அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் விவகாரம் தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாய் கிரிசில்டா தரப்பில், சமுதாயத்தில் செல்வாக்கான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆயிரம் விளக்கு போலீசார் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் அவரை அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நிறைமாத கர்ப்பிணியான தன்னை 8 மணி நேரம் காவல் நிலையத்தில் உட்கார வைத்ததாகவும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், ஜாய் கிறிஸ்ட்டாவிற்கு பிறந்த குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும், அந்த அந்த டெஸ்டில் தந்தை தான் என தெரிய வந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை தான் வாழ்நாள் முழுவதும் ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எழுத்துப்பூர்வமாக தங்களது வாதங்களை வரும் 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
Follow Us