சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மான்யா ஆனந்த். இவர் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஸ்ரேயாஸ் தொடர்பாக பேசியிருந்தார். அதில் குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் இணையத்தில் வைரலானது. அதில் ஸ்ரேயாஸ் தரப்பில் தனுஷ் படத்தில் நடிக்க வேண்டுமானால் சில அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என அழைப்பு வந்தது என குற்றம் சாட்டியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி சர்ச்சையானது. 

Advertisment

இந்த நிலையில் மான்யா ஆனந்த் தற்போது சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “சோசியல் மீடியாவில் நான் தனுஷை குற்றம் சாட்டுவது போல ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அது தவறானது. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் கொடுத்த பேட்டியில் ஸ்ரேயாஸ் பெயரிலிருந்து அப்படி ஒரு அழைப்பு வந்ததாகத்தான் குறிப்பிட்டிருந்தேன். அப்படி வந்த அழைப்பு உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் எனவும் பலர் கூறினர். 

Advertisment

இதனால் தனுஷ் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர் என ஒரு விழிப்புணர்வு பதிவாகத்தான் இதை தெரிவித்தேன். அதையும் அந்த பேட்டியில் சொல்லியிருப்பேன். முழு வீடியோவை பாருங்கள். ஆனால் நான் பேசியதை கட் செய்து தனுஷை குற்றம் சாட்டும் விதமாக மாற்றியுள்ளனர். இதை சில யூட்யூப் சேனல்கள், அவர்களது பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்காக என்னுடைய வீடியோவை தவறாக பயன்படுத்துகின்றனர். தயவு செய்து இதை நிறுத்துங்கள்” என்றார்.